புதன், 11 நவம்பர், 2015

ஆறு மாதக்குழந்தை

தீபாவளி முடிந்து இன்று 11.11.2015 . ஆனால் நேற்று நடந்த விசயங்களை நினைத்துப்பார்க்கும் போது , நரகாசுரனை வதம் செய்த திருவிழா எனச்சொல்லிக்கொண்டு, ஊரையெல்லாம் புகைமண்டலமாக மாற்றியதோடு அல்லாமல் பக்கத்து வீட்டில் இருந்த ஆறு மாத குழந்தை இருக்கிறது என்றுகூட பார்க்காமல் வெடியை வெடித்தனர்.
ஒரு நாள்முழுவதும் அந்த குடும்பமே அந்த குழந்தையை வைத்துக்கொண்டு படாதபாடு பட்டுவிட்டனர்.
இதுபோக,தீபாவளி அன்று வெடிவெடிக்காத ஊர்கள் பல இருக்கின்றன என கேள்விப்பட்டு ஆச்சர்யத்தில் மூழ்கினேன். அதுவும் குறிப்பாக திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூந்தன் குளம் மற்றும் தர்மபுரி மாவட்டத்தில் ஒரு சில ஊர்களின் பெயர்களை அறிய நேர்ந்தது. உண்மையில் அவர்கள்தான் மனிதர்கள். இயற்கையை நேசிக்கத்தெரிந்த மனிதர்கள். அவர்களை இந்தப்பதிவின் மூலம் பாராட்ட வேண்டும் என ஆசைப்படுகிறேன்.
இன்னும் இது போல நல்ல உள்ளம் படைத்தவர்கள் ஆங்காங்கே இருப்பது கண்டு மதைத்தேத்திக்கொள்ளவேண்டியதுதான்.

2 கருத்துகள்:

  1. நூற்றுக்கு தொன்னூறு பேர்கள் சுயநல பாவிகளாதத்தான் இருக்கிறார்கள் நண்பரே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மையில் அந்த சம்பவம் என்னை மிகவும் பாதித்தது. நனறி வலிப்போக்கன் ஐயா..

      நீக்கு