வெள்ளி, 18 ஆகஸ்ட், 2017

அரசியல் களம்                                                                                                                                          அதிமுகவில் அரசியல் தந்திரிகள் அநேகம் பேர் உள்ளனர். எத்தனை பொய் புரட்டு அவர்களின் வாய்களில் அனுதினமும் நாம் பார்க்கிறோம்.ஒருவர் கூட உண்மையான அரசியல் வாதிகள் இல்லை. பணத்திற்காகவும் பதவிக்காகவுமே முழு நேர அரசியல் செய்கிறார்கள். இதில் முழுமையாக ஏமாற்றப்படுவது மக்களாகிய நாம் தான். தயவு செய்து அடுத்த முறை ஓட்டளிக்கும் போது சிந்தித்து வாக்களிக்க உங்களை அன்போடு அழைக்கிறேன்                                                                                                                                                                                 இப்படிக்கு உங்கள் நண்பன்                                                                                                          ஆ. ஜோசப் ஜெயபால்- திண்டுக்கல்
தன்னம்பிக்கை                                                                                                                                   ஒருவர் தன் மீதும் தன் ஆற்றல் மீதும் வைக்கும் நம்பிக்கையே தன்னம்பிக்கை ஆகும். தன்னம்பிக்கை உள்ளவர்கள் வாழ்வில் வெற்றி பெறுவது உறுதி.தன்னம்பிக்கை இல்லாதவர்களே தோல்வியைக்கண்டு அஞ்சுவார்கள்.தன்னை யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை என்று நினைத்து மனம் தளர்ந்துவிடுவார்கள்.                                                                                                         தன்னம்பிக்கை என்பது ஒருவர் தனக்குள் கொள்கின்ற சுய தயாரிப்பே ஆகும். அவர் தன்னை அவ்வாறு தயாரித்துக்கொள்ளும் போது, தன்னைப் பற்றி சுய ஆய்வு செய்கிறார்.அப்போது தன்னுடைய ஆற்றலைக் கண்டுபிடித்து அதைப் பயன்படுத்தி, தான் அடைய விரும்பும் இடத்தையும் சென்று அடைந்துவிடுகிறார். தன்னம்பிக்கை ஒருவரை நேர்வழியில் சிந்திக்க வைக்கிறது.                                                                                                                                          தன்னைப் பற்றிய சுய உணர்வே இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய கண்டுபிடிப்பு என்கிறார்கள் மனோதத்துவ அறிஞர்கள். நம்மைப் பற்றி நாம் என்ன எண்ணம் கொண்டிருக்கிறோம் என்பதைப் பொறுத்துத்தான் நமது மகிழ்ச்சியும் சாதனையும் அமைகின்றன என்கிறார்கள்.                                                 வளமான மனமும் தன்னைப் பற்றிய மேன்மையான சுய உணர்வும் கொண்டவர்கள் தன்னை மதிப்பதோடு தன்னைச் சுற்றியுள்ள சமுதாயத்தையும் மதிக்கிறார்கள். ஒருவருடைய சுய உணர்வே அவருக்குத் தன்னம்பிக்கையை அளிக்கிறது. சுய உணர்வு உடையவர்கள் தங்கள் பலத்தைத் தெரிந்துகொள்வதோடு தங்களுடைய பலவீனத்தைத் தெரிந்து வைத்திருக்கிறார்கள். அதனால், தங்களுக்குக் கிடைக்கும் உண்மையான பெயரையும் புகழையும் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்கிறார்கள்.

திங்கள், 17 அக்டோபர், 2016

எ ன்  தா ய்  மொழியாம் தமிழ் மொழிக்கு 


செந்தமிழ் தாய் மொழியாள் – நம்
செவ்விதழ் வாய் மொழியாள்
சிந்திய தேன் மொழியாள் – நம்
இந்திய தேசத்து செம்மொழியாள்..

மூலமொழிக்கு முதல் மொழியாம் – நம்
முத்தமிழ் செந்தமிழ் தனி மொழியாம்
முத்துக் குளித்த முதல் மொழியாம் –நம்
மூத்தோர் மூதுரைத்த இன் மொழியாம்..

அகத்தியன் முதலாய் தொல் காப்பியன் ஈறாய்
ஆயிரம் பாவலர் புனைந்த நல் நாற்றாய்
இலக்கணச் சுவையோடு நற்குணம் ஏற்றாய்
உள்ளம் பெரிதுவக்க அடியார்க்கு ஈந்தாய்..

உந்தி முதலா முந்திவளி தோன்றி
உயிர்முன் மெய்யாய் மெய்முன் உயிறாய்
ஒற்றுமுன் பகுதி விகுதி சந்தியாய் தெளிந்த
நல்பதம் சேர்க்கும் கண்மனியாள்..

அகம் புறம் நானூறும் அடக்கி
தொண்ணூற்று ஆறு சிற்றிலக்கியமும்
பதினெண் கீழ்மேல் கணக்கென
பொழிந்த நற்றமிழ் கண்மனியாள்..

தமிழின் மீது தணியாத தாகம் கொள்வோம்
தரணியில் சிறந்தது தமிழென மொழிவோம்
தமிழால் தமிழ்க்குடி தழைக்கு மென்போம்
தமிழே உயிர் மூச்செனக் கொள்வோம்..

வெள்ளி, 13 நவம்பர், 2015

ஒரு காட்டமான செய்தி..

எல்லாருக்கும் ஒரு காட்டமான செய்தி..
ஏங்க.. பிளாக்கர்ல எழுதனும், பிளாக்கர்ல எழுதனும்னு சொல்ரீங்கலே.. நாங்க எழுதுனா யார் படிக்கிறது..
நானும் புதுக்கோட்டையில் நடந்த வலைப்பதிவர் சந்திப்புக்கு வந்திருந்தேன். ஆனா, அதுக்கப்புறம் இதப்பத்தின ஒரு தகவலும் இல்லை. நான் என்னால முடுஞ்சத , எனக்கு தெரிஞ்சத பக்கத்தில் இருந்தவங்களுக்கு சொல்லிக்கொடுத்து பிளாக்கர்ல எழுதவச்சிருக்கேன்..
சரி ஒரு வேல நம்ம எழுதர பதிவு சரியில்லாம இருக்குமோனு கூட நெனச்சிருக்கேன்.இதுல என்னா கொடுமைய்னா, வலைப்பதிவுத்திருவிழாவில் பரிசுப்போட்டினு நடத்தி. நல்ல பழந்தின்னு கொட்ட போட்ட நபர்களுக்குத்தான் பரிசு கொடுத்தார்கள்..
அதில் யாருமே சாமானியர்கள் கிடையாது. எல்லாரும் பெரிய பெரிய கல்லூரிகளில் வேலை பார்க்கிற ஆசிரியர்கள்.அவர்களுக்கு தெரியாத விசயங்கள் என்ன இருக்கு?படித்தவர்கள் பொதுவாக நிறைய தெரிஞ்சு வைத்திருப்ப்பார்கள். சரி நீங்க எப்படியோ போங்க..
நாங்கள் எழுதிக்கொண்டு இருக்கிறோம் என்பதை மற்றவர்களுக்கு எப்படித்தெரியும். புதுசா எழுதர எங்களமாதிரி புதுப்பதிவர்களுக்கு ஒரு பிடிப்புமே இல்லை. தமிழை வளர்க்க எல்லாருடைய பங்கும் முக்கியம் என்பதை நீங்க எல்லாரும் புரிஞ்சுக்கனும்
இதுல நிறைய விசயங்கள் கொட்டிக்கிடக்குது.ஆனா அத எப்படி தெரிஞ்சுக்கிறதுன்னுதான் தெரியல. ம்ம்…
ஏதோ, பிளாக்கரப்பத்தி கொஞ்சம் தெரிஞ்சது. அதனால தான் இவ்வளவுதூரம் அதுவும் தமிழில் தட்டச்சு வரைக்கும் தெரிஞ்சது..இத எல்லாருக்கும் நான் சொல்லலாம்னா தெரியல..

 ஏதோ என்மசில் பட்டத இந்த பதிவில சொல்லனும்னு நெனச்செ.. சொல்லிட்டேன்.. அவ்வளவுதான்..
அன்பு என்பது நெல் மாதிரி
போட்டாத்தான் முளைக்கும்  - ஆனால்
வம்பு என்பது புல் மாதிரி

எதுவும் போடாமலே முளைக்கும்…

இன்னொரு மனம்..

இன்னொரு மனம்..
இன்னொரு முகம்
இருக்கிறது என்பதைக் காட்ட
இல்லாத முகத்தை எப்படி
இயல்பாய் காட்டுவது..
இதயத்தை பிழிந்து எடுக்கிறது
அவனது பிரிவு..
எண்ணியடங்காது சொல்லியும் மாளாது
காதலில் விழுந்த என்னைத்தூக்கிவிட என்
காதலன் எப்போது வருவான்.
நாளொரு வன்னம்
பொழுதொரு மேனியும் என்னவனைக்காண
என் இதயம் அலைபாயுது..
கட்டிப்பிடி வைத்தியமொன்றைக் கற்றுக்கொடுத்தேன்
அதில் அவன் பைத்தியமாய் ஆனானென்று
செவிவழிச்செய்தியொன்று நான் கேட்டேன்..
மறுபிறவியெடுத்து அவனோடு வாழ ஆசை
ஆனால் மனமில்லாமல் போனது நிறையாசை..
கனவொன்று நான் கண்டேன் -அதில்
அவன் விளையாட நான் கண்டேன்…


புதன், 11 நவம்பர், 2015

ஆறு மாதக்குழந்தை

தீபாவளி முடிந்து இன்று 11.11.2015 . ஆனால் நேற்று நடந்த விசயங்களை நினைத்துப்பார்க்கும் போது , நரகாசுரனை வதம் செய்த திருவிழா எனச்சொல்லிக்கொண்டு, ஊரையெல்லாம் புகைமண்டலமாக மாற்றியதோடு அல்லாமல் பக்கத்து வீட்டில் இருந்த ஆறு மாத குழந்தை இருக்கிறது என்றுகூட பார்க்காமல் வெடியை வெடித்தனர்.
ஒரு நாள்முழுவதும் அந்த குடும்பமே அந்த குழந்தையை வைத்துக்கொண்டு படாதபாடு பட்டுவிட்டனர்.
இதுபோக,தீபாவளி அன்று வெடிவெடிக்காத ஊர்கள் பல இருக்கின்றன என கேள்விப்பட்டு ஆச்சர்யத்தில் மூழ்கினேன். அதுவும் குறிப்பாக திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூந்தன் குளம் மற்றும் தர்மபுரி மாவட்டத்தில் ஒரு சில ஊர்களின் பெயர்களை அறிய நேர்ந்தது. உண்மையில் அவர்கள்தான் மனிதர்கள். இயற்கையை நேசிக்கத்தெரிந்த மனிதர்கள். அவர்களை இந்தப்பதிவின் மூலம் பாராட்ட வேண்டும் என ஆசைப்படுகிறேன்.
இன்னும் இது போல நல்ல உள்ளம் படைத்தவர்கள் ஆங்காங்கே இருப்பது கண்டு மதைத்தேத்திக்கொள்ளவேண்டியதுதான்.